விரிஞ்சிபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மையில் இடுபொருள் உற்பத்திக்கான பயிற்சி வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர்

வேலூர், ஜன.7: வேலூர் விரிஞ்சிபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மையில் இடுபொருள் உற்பத்திக்கான பயிற்சி நடந்தது. இதில் வேளாண் விஞ்ஞானிகள் விவசாயிகளுக்கு பல்வேறு விளக்கங்களை அளித்தனர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண்மை அறிவியல் நிலையத்தை, நாளுக்கு நாள் அங்கக வேளாண்மையில் பயிரிடப்படும் பயிரின் பரப்பளவு, தேவை அதிகரித்தல் மற்றும் தேன் முக்கியத்துவத்தை உணர்ந்த வேலூர் மாவட்டத்தின், தொண்டை மண்டல உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள், அங்கக வேளாண்மை பற்றிய தொழில்நுட்ப உரையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டனர்.

அதன்படி, அங்கக வேளாண்மையில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்கள் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் விஞ்ஞானிகளால் எடுத்துரைக்கப்பட்டது. அப்போது உயிர் உரங்கள், உயிர் பூஞ்சாண கொல்லி, உயிரியல் நோய் எதிர்ப்பு காரணிகள் உற்பத்தி செய்வதற்கான வரைத்திட்டங்கள், வங்கியில் கடன் மற்றும் மானியம் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் அணுகு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் பயிற்சி பெற்ற தொண்டை மண்டல உற்பத்தியாளர் குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து வேலூர் மாவட்டத்திற்கு தேவையான அங்கக இடுபொருட்களான உயிர் உரங்கள், உயிர் பூஞ்சாண கொல்லி, உயிரியல் நோய் எதிர்ப்பு காரணிகள் ஆகியவற்றை அவர்களே குழுவின் மூலம் உற்பத்தி செய்து வேலூர் மாவட்டத்தில் உள்ள அங்கக வேளாண்மை விவசாயிகளுக்கு வினியோகம் செய்யும் முயற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளதாக விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் தெரிவித்தார்.

Related Stories: