பரமக்குடியில் வாக்குப்பதிவு மையத்தை கலெக்டர் ஆய்வு

பரமக்குடி, டிச.31:  ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலையொட்டி பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்திலுள்ள. ஓட்டுச்சாவடி  மையத்தினை  மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பார்வையிட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 27ம் தேதி முதல் கட்ட தேர்தலும், நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் கமுதி, முதுகுளத்தூர்,கடலாடி, பரமக்குடி, நயினார் கோவில், போகலூர் உள்ளிட்ட 6 ஊராட்சி ஒன்றியங்களில் 4 லட்சத்து 33 ஆயிரத்து 499 வாக்காளர்கள் 1006 வாக்கு சாவடிகளில் வாக்களித்ததனர்.

இதில் 106 வாக்கு சாவடிகள் பதட்டம் நிறைந்த வாக்கு சாவடிகள் கண்டறியப்பட்டு  இரண்டாயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டனர். தேர்தல் 153 வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது. பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில் உள்ள சுந்தரம் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தை கலெக்டர் வீரராகவராவ் பார்வையிட்டார்.

Related Stories: