இந்திய டாக்டர்கள் சங்க மீனாட்சி கிளை புதிய நிர்வாகிகள்

மதுரை, டிச. 30: இந்திய டாக்டர்கள் சங்க மீனாட்சி கிளைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்திய டாக்டர்கள் சங்க மீனாட்சி கிளைக்கு புதிய தலைவராக தலைமை இதயவியல் நிபுணர் டாக்டர் கணேசன், செயலாளராக புற்றுநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் கிருஷ்ணகுமார் ரத்தினம், பொருளாளராக மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ரமேஷ் அர்த்தநாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர் கண்ணன், டாக்டர்கள் மோகன், குமார், கிருஷ்ணகுமார்,  செல்வமணி, கிருஷ்ணமூர்த்தி, கண்ணன், செல்வமுத்துக்குமரன் உள்ளிட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். டாக்டர். செந்தில்குமார் நன்றி கூறினார்.

Related Stories: