பிரகாசபுரத்தில் புத்தாடை வழங்கல்

நாசரேத், டிச. 29:  நாசரேத் அருகே பிரகாசபுரம் எஸ்.டி.ஏ. சபையில் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் மளிகை சாமான், அரிசி, புத்தாடை என பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் இந்தாண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஏழைகளுக்கு உணவு பொருட்கள், அரிசி மற்றும் புத்தாடைகள் வழங்கும் விழா நடந்தது. தலைமை வகித்த சபை பாஸ்டர் அருளானந்தம், ஜெபித்து துவக்கிவைத்தார். 27 பேருக்கு உணவுப்பொருட்கள், 500 பேருக்கு இலவச அரி, 270 பேருக்கு புத்தாடை என பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சபை பாஸ்டர் அருளானந்தம் டேனியல் தலைமையில் சபை விசுவாசிகள் செய்திருந்தனர்.

Related Stories: