புதுக்கோட்டையில் ரியல் எஸ்டேட் நலசங்க அடையாள அட்டை வழங்கல்

தூத்துக்குடி, ஜூன் 10: புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சுற்று வட்டார ரியல் எஸ்டேட் நலசங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் சுற்று வட்டார ரியல் எஸ்டேட் உறுப்பினர்கள் 160 பேருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி ராஜாசுந்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில் பஞ்சாயத்து தலைவர் மாங்கனி ஹரிபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சுற்று வட்டார ரியல் எஸ்டேட் நலச்சங்க தலைவர் வெயில்ராஜ், செயலாளர் ராபர்ட் செல்லையா, பொருளாளர் சாமுவேல், துணைத்தலைவர் கருப்பசாமி, கவுரவ ஆலோசகர்கள் வேலாயுதம், சேதுராஜன், பரமசிவன், சத்தியராஜ், நாராயணன், சக்தீஸ்வரன், அலுவலக பொறுப்பாளர் அய்யாபிள்ளை, கார்த்தீபன், பஞ்சாயத்து தலைவர்கள் ஜாக்சன் துரைமணி, சித்திரைசெல்வன், ஆனந்தகுமார், ரம்யா, ஆனந்தி மாரிமுத்து மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

The post புதுக்கோட்டையில் ரியல் எஸ்டேட் நலசங்க அடையாள அட்டை வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: