தொண்டி, டிச.25: தேன் ஒழுகல் நோய் பாதித்த விதைகளை நீக்க வேளாண்துறை சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.இறவையில் கம்பு பயிரிடுவதற்கு கோ-7, கோ (சியு) 9, ஐசிஎம்வி-221, ராஜ்-171, எக்ஸ்-7 ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும். எக்டேருக்கு 3.75 கிலோ விதை இட வேண்டும். எக்டேருக்கு 7.5 சென்டில் நாற்றாங்கால் அமைக்க வேண்டும். 3*1.5 மீ அளவு கொண்ட 6 படுக்கைகளை 1 சென்டில் அமைத்து அரை மீட்டர் கால்வாய் அரை அடி ஆழத்தில் ஒவ்வொரு படுக்கையை சுற்றியும் அமைக்க வேண்டும். எக்டேருக்கு 750 கிலோ தொழுஉரம் இட வேண்டும். தேன் ஒழுகல் நோய் பாதித்த விதைகளை நீக்க 10 லிட்டர் நீரில் 1 கிலோ உப்பினை கரைத்து விதைகளை அதில் கொட்டி மிதக்கும் விதைகளை நீக்கி, நல்ல தண்ணீர் கொண்டு 3 அல்லது 4 முறை கழுவி நிழலில் உலர்த்த வேண்டும்.