கரூர் பசுபதீஸ்வரர் கோயில் வளாகத்தில் பொது சமய சன்மார்க்க சங்க ஆண்டு விழா

கரூர், டிச. 25: கரூர் பசுபதீஸ்வரர் கோயில் வளாகத்தில் சன்மார்க்க சங்கம் சார்பில் புகழ்ச்சோழர் மண்டபத்தில் திருவிளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பொன்பாண்டு ரங்கசாமி தலைமை வகித்தார். தொடர்ந்து அருமந்த அரசாட்சி என்ற தலைப்பில் பேராசிரியர் மாணிக்கவாசகமும், ராஜராஜசோழனின் ஆட்சியும் மாட்சியும் என்ற தலைப்பில் பேராசிரியர் பாண்டியனும் பேசினர். தொடர்ந்து கரூர் சிவனடியார்கள் சார்பில் இறை வணக்க நிகழ்வும், வித்யாசங்கர சரஸ்வதிசுவாமிகள் சார்பில் அருளாசி நிகழ்வும் நடைபெற்றன. இந்த நிகழ்வுகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொது சமய சன்மார்க்க சங்கத்தினர் செய்திருந்தனர். கிணறுகள் காட்டுப் பகுதியிலும் வயல் பகுதியிலும் உள்ளது அதனால் விவசாயிகள் பொதுமக்கள் கால்நடைகள் பாதுகாப்பு நலன் கருதி சுற்றுச்சுவர் அல்லது வேலி அமைக்க வேண்டும் என தீயணைப்பு அதிகாரி அறிவுரை வழங்கினார்

Related Stories: