இலங்கையில் நடக்கும் சர்வதேச கராத்தே போட்டிக்கு குமரி வீரர்கள் தேர்வு

அஞ்சுகிராமம், டிச.24: அஞ்சுகிராமம் அருகே ஜேம்ஸ்டவுண் கென் புடோ காய்கான் கராத்தே டோ இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த 8 மாணவர்கள் இலங்கையில் நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியில் பங்குபெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கண்டி பகுதியில் நாளை (25ம்தேதி) முதல் 29ம் தேதி வரை சர்வதேச கராத்தே போட்டிகள் நடக்கிறது. இதில் 24 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியில் கலந்து கொள்ள குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே ஜேம்ஸ்டவுண் கென் புடோ காய்கான் கராத்தே டோ இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த 8 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராகவ், அஜய், ஆஸ்டல் ஆரோன், ராம் கிஷோர், விஷ்வா, கெவின் அருள் சகாய ரீகன், அபிநயா எழில், சுகிக்ஷா ஆகிய 8 மாணவர்களும் கராத்தே பள்ளியில் தலைவர் கிராண்ட் மாஸ்டர் சிகான் சுந்தர் தலைமையில் திருவனந்தபுரத்தில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர்.  இவர்களுக்கான வழியனுப்பு விழா நடைபெற்றது. கென் புடோ காய்கான் நிறுவனத் தலைவர் ராஜசேகர் வழி அனுப்பி வைத்தார். நிகழ்ச்சிக்கு, ஓய்வுபெற்ற கடலோர காவல்படை அதிகாரி முருகன் தலைமை வகித்தார். இதில், பள்ளி முதல்வர்கள் நிர்மலா, குளோரி அபிதா, ஜஸ்மி லூடி ஷீபா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

Related Stories: