புதியம்புத்தூரில் 2ம் கட்ட பயிற்சி வகுப்பு தேர்தல் பார்வையாளர், கலெக்டர் ஆய்வு

ஓட்டப்பிடாரம், டிச.22: புதியம்புத்தூரில் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பினை தேர்தல் பார்வையாளர் மற்றும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.   

உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே முதல்கட்ட பயிற்சியானது கடந்த வாரம் நடந்தது. நேற்று 2ம் கட்ட பயிற்சி புதியம்புத்தூர் தனியார் மேல்நிலைப்பள்ளியில் 17 அறைகளில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்பட்டது.  இப்பயிற்சியினை ஓட்டப்பிடாரம் யூனியன் வார்டு தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமார் நடத்தினார்.

 அப்போது அங்கு வந்த தூத்துக்குடி மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் சம்பத் பயிற்சி குறித்தும், சந்தேகங்கள் குறித்தும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அதன்பின் வந்த கலெக்டர் சந்தீப் நந்தூரி, தேர்தல் நடத்தும் முறைகள் குறித்தும் வாக்காளர்களின் சந்தேகங்கள், டெண்டர் ஓட்டுக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட வாக்காளர்களின் உரிமைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.  ஓட்டப்பிடாரம் தாசில்தார் ரகு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மதி, சுகுமார், ஹெலன் பொன்மணி, பிடிஓ வளர்மதி, யூனியன் மேலாளர் தாசன் உள்ளிட்ட அதிகாரிகள்  கலந்துகொண்டனர்.

கோவில்பட்டி: கோவில்பட்டி யூனியனில் உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் வாக்குசாவடி அனைத்து அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி முகாம் நடந்தது. கோவில்பட்டி லட்சுமிமில் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி முகாமில் கோவில்பட்டி கூட்டுறவு துணை பதிவாளர் ஜெயசீலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, உதவி தேர்தல் அலுவலர்கள் குமரன், மாரியப்பன், சுப்பையா ஆகியோர் உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் வாக்குசாவடி அலுவலர்களுக்கு தேர்தலில் பணியாற்றுவது குறித்து பயிற்சி அளித்தனர். இதில் 1702 மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

Related Stories: