பண்ணாரி அம்மன் கல்லூரிக்கு ஜல்சக்தி அபியான் விருது

சத்தியமங்கலம், டிச.19: மத்திய அரசின் நீர்வள அமைச்சகமான ஜல்சக்தி துறை மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை  சார்பில் சிறந்த நீர் மேலாண்மை மேற்கொண்ட கல்லூரிகளுக்கு 2019ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் தொழில்நுடப்க்கல்லூரிக்கு தேசிய அளவில் சிறந்த நீர் மேலாண்மை, தூய்மை மற்றும் சிறந்த கல்லூரி வளாகங்களுக்கான தரமதிப்பீட்டில் தூய்மை மற்றும் ஸ்மார்ட் வளாக விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த வாரம் புதுடெல்லியில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் சார்பில் சிறந்த கல்லூரி வளாகத்திற்கான விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சிறந்த முறையில் கல்லூரி வளாகத்தை பராமரித்து விருது பெற உதவியாக இருந்த கல்லூரி நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களுக்கு பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: