படைப்புழு தாக்குதல் குறித்து மக்காச்சோள சாகுபடி வயல்களில் வேளாண் விஞ்ஞானி ஆய்வு

அரியலூர், டிச. 17: செந்துறை நக்கம்பாடி, நமங்குணம், வஞ்சினபுரம் பகுதியில் சாகுபடி செய்த மக்காச்சோள வயலில் படைப்புழு தாக்குதல் குறித்து வேளாண் விஞ்ஞானி ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் 1,600 ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோள பயிர் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பயிரானது தற்போது அறுவடை நிலையில் உள்ளது. இப்பயிரில் ராணுவ படைப்புழு தாக்குதல் குறித்து நக்கம்பாடி, நமங்குணம், வஞ்சினபுரம் ஆகிய கிராமங்களில் திருச்சி வேளாண் கல்லூரியை சேர்ந்த பூச்சியியல் பேராசிரியர் சந்திரசேகரன் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், படைப்புழுவின் தாக்குதல் ஒட்டுமொத்த மருந்து தெளிப்புக்கு பின் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மகசூல் இழப்பு அதிகளவில் ஏற்படாது என்றார்.ஆய்வின்போது வேளாண் துணை இயக்குனர் பழனிசாமி, வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ், வேளாண்மை உதவி இயக்குனர்(பொ) ஜென்சி, துணை வேளாண்மை அலுவலர் அப்பாவு மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் முருகானந்தம் உடனிருந்தனர்.

Related Stories: