மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இணையதள முகவரி, பள்ளிகள், செல்போன்களில் அறிந்து கொள்ளலாம்: பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்

பெரம்பலூர், மே 10: (10ம் தேதி) 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. இணையதள முகவரியில், பள்ளிகளில், செல்போன்களில் அறிந்து கொள்ளலாம் என்று பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்திருப்பதாவது : தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககத்தால் எஸ்எஸ்எல்சி எனப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இன்று (10ம்தேதி) வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகின்றன. சென்னை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந் துள்ள அரசுத் தேர்வுகள் இயக்கத்தில், காலை 9:30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு முடிவுகளை காலை 9.30 மணி முதல் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in மற்றும் https//results.digilocker.gov.in என்ற இணையதள முகவரிகளில் தெரிந்து கொள்ளலாம். இதற்காக தேர்வர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இணைய தளங்களில் தங்களது பதிவெண் மற் றும் பிறந்ததேதி ஆகிய வற்றைப் பதிவுசெய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையத்திலும் (NIC) அனைத்து மைய மற்றும் கிளை நூலங்களி லும், கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி களிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண் ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி (எஸ்எம் எஸ்) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என பெரம்பலூர் மாவட்ட முதன் மைக்கல்விஅலுவலர் மணி வண்ணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post மாணவ, மாணவிகள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இணையதள முகவரி, பள்ளிகள், செல்போன்களில் அறிந்து கொள்ளலாம்: பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: