பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடப்பு கல்வியாண்டிற்கான சேர்க்கை

பெரம்பலூர், மே 16: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 2024-25ம் கல்வியாண் டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை வருகிற ஜூன் 7ம்தேதி வரை நடை பெறவுள்ளது என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தி ருப்பதாவது :
பெரம்பலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ், பெரம்பலூர், ஆலத்தூர் மற்றும் குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 3-தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் தற்போது 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை நடைபெற உள்ளது.

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.skilltraining.tn.gov.in < //www.skilltraining.tn.gov.in/ > என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக் கலாம். அல்லது சம்மந் தப்பட்ட அரசு ஐடிஐக்கு வந்து விண்ணப்பிக்க லாம். இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 136 உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம். இந்த மையங்களின் பட்டியல் மற்றும் தொலைபேசி விவரம் மேற்குறித்த இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான கடைசிதேதி வருகிற ஜூன்மாதம் 7ம் தேதி ஆகும். விண்ணப்ப கட்டணம் ரூ 50-ஐ விண்ண ப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking / GPay மூலம் செலுத்தலாம். வயது வரம்பு மாணவர்களுக்கு 14 வயது முதல் 40வயது வரை ஆகும்.

மாணவிகளுக்கு வயது வரம்பு ஏதுமில்லை. மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் கலந்தாய் வுக்கு தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்கள் www.skilltraining.tn.gov.in < //www.skilltraining.tn.gov.in/ > என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். குன்னம் வட்டத்திற்குட்பட்ட பெரியவெண்மணியில் இயங்கி வரும் குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் Electrician , Fitter, Draughtsman Civil , Sewing Technology ஆகிய பிரிவுகள் உள்ளது.

Sewing Technology பிரிவிற்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சியும், Electrician, Fitter, Draughtsman Civil பிரிவிற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றி ருக்க வேண்டும்.ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒரு வருட தொழிற்பிரிவுகளான Welder, Solar Technician (Electrical), Industrial Robotics & Digital Manufacturing Technician ஆகிய பிரிவுகளும், 2 வருட தொழிற் பிரிவுகளான Electrician, Fitter, Machinist, Mechanic Electric Vehicle, Advanced CNC Machining Technician ஆகிய பிரிவுகளும் உள்ளது. பற்றவைப்பவர் (Welder) தொழிற்பிரிவுக்கு மட்டும் 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏனைய தொழிற்பிரிவுகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அசல் சான்றிதழ்கள்-T.C, Mark Sheet, Community Certificate, Aadhaar, Passport Size Photo ஆகியவற்றுடன் அரசு வேலை நாட்களில் சம்மந்தப்பட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையத் தில் செயல்படும் உதவி சேர்க்கை மையம் மூலமாக நேரில் வந்து விண்ணப்பத் தினை பதிவு செய்து கொள்ளலாம்.

ஐடிஐ படிக்கும் காலத்தில் மாணவ, மாணவியருக்கு சீருடை, மூடுகாலணி, மிதிவண்டி, பாடப் புத்தகங்கள், வரைபட கருவிகள், பேருந்து பயண அட்டை மற்றும் பயிற்சிக்கு தேவையான நுகர் பொருட்கள் முதலியவை தமிழக அரசால் இலவசமாக வழங்கப் படுகிறது. மேலும் மாதந் தோறும் ரூ.750 உதவித் தொகையும், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ரூ1000- உயர்கல்வி உதவி த்தொகையும், படித்து முடித்த பின் Act Apprenticeship மூலம் Apprenticeship மற்றும் வளாக நேர்காணல் மூலம் முன்னணி நிறுவனங் களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும்.
மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் அரசு தொழிற் பயிற்சி நிலைய தொடர்பு எண்களான 94438 52306, 90479 49366, 63797 64520 மற்றும் gitiperambalur@gmail.com < mailto:gitiperambalur@gmail.com > என்ற மின்னஞ்சல் மூலமா கவும், ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய தொடர்பு எண்களான 94990 55883, 94990 55884 மற்றும் govtitialathur@gmail.com < mailto:govtitialathur@gmail.com > என்ற மின்னஞ்சல் மூலமா கவும், குன்னம்அரசு தொழிற்பயிற்சி நிலைய தொடர்பு எண்களான 98946 97154, 98406 63297, 63790 02729 மற்றும் 04328 299800 மற்றும் gitikunnam@gmail.com < mailto:gitikunnam@gmail.com > என்ற மின்னஞ்சல் மூலமாகவும், பெரம்பலூர் மாவட்ட திறன் பயிற்சிஅலுவலக தொடர்பு எண்ணான 94884 51705 மற்றும் dstoperambalur@gmail.com < mailto:dstoperambalur@gmail.com > என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடப்பு கல்வியாண்டிற்கான சேர்க்கை appeared first on Dinakaran.

Related Stories: