ஆலத்தூர் ஒன்றியத்தில் ஒரு வாரத்தில் கிராம பஞ்சாயத்தை சார்ந்த மகளிருக்கு இலவச சணல் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி: பங்கேற்று பயன்பெற அழைப்பு

பெரம்பலூர்,மே12: பெரம்பலூர் மாவட்ட கிராம பஞ்சாயத்தை சார்ந்த மகளிருக்கு நாளை முதல் இலவசமாக அளிக்கப்படும் சணல் பொருட்கள் தயாரித்தல் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம் என ஊரக சுய வேலை வாய்ப்புப் பயிற்சி மைய இயக்குநர் ஆனந்தி ெதரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் நகரில், எளம்பலூர் சாலையில் உள்ள இந்தியன் ஒவர்சீஸ் வங்கி யின், ஊரக சுய வேலை வாய்ப்புப் பயிற்சி மையத் தின் மூலம், கிராம பஞ்சா யத்தை சேர்ந்த மகளிருக்கு சணல் பொருட்கள் தயாரித் தல் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட இருக்கிறது.பயிற்சியின் காலஅளவு 13 நாட்கள் ஆகும். பயிற்சி பெறும் நபர்கள் 19 வயது முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆகும்.

பயிற்சி காலத்தில் மதிய உணவு மற்றும் காலை, மாலை தேநீர் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியின் முடிவில்மத்திய அரசால் அங்கீகரிக் கப்பட்ட பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். தொழில் தொடங்க ஆலோசனை மற்றும் கடனுதவி பெற்று தரப்படும் இந்தப் பயிற்சி யில் பெரம்பலூர் மாவட்ட கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்த மகளிர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். நாளை துவங் கும், இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயன்பெற விரும் பும் மகளிர், பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள கர்ணம் சுப்பிரமணி யம் சகுந்தலா காம்ப்ளக்ஸ் முதல் தளத்தில் இயங்கி வரும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம். விண் ணதாரர்கள் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வி தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு வி்ண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித் துள்ளார்.

The post ஆலத்தூர் ஒன்றியத்தில் ஒரு வாரத்தில் கிராம பஞ்சாயத்தை சார்ந்த மகளிருக்கு இலவச சணல் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி: பங்கேற்று பயன்பெற அழைப்பு appeared first on Dinakaran.

Related Stories: