தாராசுரத்தில் இருந்து சுவாமிமலைக்கு பால்குட ஊர்வலம்

கும்பகோணம், டிச. 17: கார்த்திகை கடைசி சோமவாரத்தையொட்டி தாராசுரத்தில் இருந்து சுவாமிமலை கோயிலுக்கு நெசவாளர்கள் பால்குடம் எடுத்து சென்றனர்.

இதையொட்டி நேற்று முன்தினம் தாராசுரம் திருக்குளம் மேல்கரை குபேர விநாயகர் கோயிலில் அபிஷேக ஆராதனை செய்தனர். இதையடுத்து நேற்று அரசலாற்றங்கரையில் காவடி, பால்குடங்கள் எடுத்து சுவாமிமலைக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றனர். அங்கு சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இன்று குபேர விநாயகர் கோயிலில் இடும்பன் பூஜை நடக்கிறது.

Related Stories: