கல்வி வேலை வாய்ப்புகளில் 5 சதவீதம் ஒதுக்கீடு வேண்டும் சலவையாளர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

திருவாரூர், டிச.16: சலவை தொழிலாளர்களுக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் 5 சதவீதம் ஒதுக்கீடு வேண்டும் என தமிழக சலவையாளர் கூட்டமைப்பின் சார்பில் திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.தமிழக சலவையாளர் கூட்டமைப்பின் உயர்மட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் மாநில தலைவர் செல்லையா தலைமை வகித்தார். கூட்டத்தில் மத்திய சங்க நிர்வா கிகள் குழந்தைவேலு, ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சலவை தொழிலாளர் சங்க பேரவை முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர்.

கூட்டத்தில், சலவையாளர் சமூகத்தை எஸ்சி பட்டியலில் சேர்க்க தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டிப்பது, உள்ளாட்சி, சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் சலவையாளர் சமூகத்தினருக்கு 5 சதவீதம் தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 5 சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்றும் இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 20 ம் தேதி தமிழகம் முழுவதிலும் மாவட்ட கலெக்டர்களை நேரில் சந்தித்து மனுக்கள் அளிப்பது எனவும், அதனை தொடர்ந்து கோரிக்கைகளை வலி யுறுத்தி மாநில அளவிலான மாநாடு நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக முத்தையன் வரவேற்றார். முடிவில் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Related Stories: