சம்பளத்தை குறைத்து வழங்கும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, டிச. 16: சம்பளத்தை குறைத்து வழங்கும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து தஞ்சை ரயிலடியில் சிஐடியூ ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிளை தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். ரயில்வே ஒப்பந்த கோட்ட தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் மனோகரன் கண்டன உரையாற்றினார்.இதில் தனியார் நிறுவனம் மாதம்தோறும் ஒப்பந்த தொழிலாளர்களான 45 பேருக்கு தலா ரூ.503 என்று சம்பளம் கூறி ரயில்வே நிர்வாகத்திடம் பெற்று கொண்டு ரூ.240 ஐ கடந்த 2 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. மேலும் ஏடிஎம் பறித்து வைத்து கொண்டும், பிஎப் பணம் பிடித்தம் செய்து அதை கட்டாமல் இருப்பதை கண்டிப்பது. எனவே தனியார் ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மேலும் இந்த கோரிக்கை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தஞ்சை ரயிலடி முன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று மாநில தலைவர் மனோகரன் தெரிவித்தார்.

Related Stories: