சேலத்தில் 27 மையங்களில் தேசிய வருவாய்வழித் தேர்வு

சேலம், டிச.16: சேலம் மாவட்டத்தில் 27 மையங்களில் நடந்த தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வில், 294 மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை. மத்திய அரசு சார்பில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை (என்எம்எம்எஸ்) தேர்வு நடத்தப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9ம் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை, ஆண்டுதோறும் ₹6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். சேலம் மாவட்டத்தில், இத்தேர்வினை 8,169 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக சேலம் கல்வி மாவட்டத்தில் 6, சங்ககிரியில் 5, ஆத்தூரில் 5, இடைப்பாடியில் 6 மற்றும் சேலம் ஊரகத்தில் 5 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 27 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

காலை 9.30 மணிமுதல் 11 மணிவரை மனத்திறன் தேர்வும், காலை 11.30 மணிமுதல் 1 மணிவரை படிப்பறிவு தேர்வு நடந்தது. இதில், விண்ணப்பித்திருந்த 7,875 மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டு தேர்வெதினர். 294 பேர் தேர்வெழுத வரவில்லை. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி மற்றும் அதிகாரிகள், தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Stories: