பொதுமக்கள் முடிவு அரசு பேருந்தை சிறைபிடித்து மாணவ, மாணவிகள் போராட்டம்

திருவையாறு, டிச. 13: திருவையாறில் புனிதவளனார் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அரியலூர் மாவட்டம் திருமானூர், ஏலாக்குறிச்சி, வெங்கனூர், திருமழாபாடி ஆகிய ஊர்களில் இருந்து திரளான மாணவ, மாணவிகள் வந்து படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையில் சிறப்பு வகுப்பு எடுக்கப்படுகிறது. மாலையில் வகுப்பு முடிந்ததும் பழைய தாலுகா அலுவலகம் அருகே நின்று பயணம் செய்வதற்காக பேருந்தை நிறுத்த முயற்சி செய்கின்றனர். ஆனால் பஸ்கள் நிற்காமல் சென்று விடுகிறது. இந்நிலையில் நேற்று மாலை சிறப்பு வகுப்புகள் முடிந்து மாணவ, மாணவிகள் வந்து பழைய தாலுகா அலுவலகம் அருகே பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற வெங்கனூர், ஏலாக்குறிச்சி செல்லும் அரசு பேருந்துகளை மறித்து சிறைபிடித்தனர். இந்த தகவல் கிடைத்ததும் திருவையாறு சப்இன்ஸ்பெக்டர் அபர்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முறைப்படி காவல் நிலையத்தில் மனு கொடுங்கள், அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories:

>