தஞ்சையில் இருந்து திருநெல்வேலிக்கு 1,000 டன் நெல் மூட்டைகள் அரவைக்காக அனுப்பி வைப்பு

தஞ்சை, டிச. 13: தஞ்சையில் இருந்து திருநெல்வேலிக்கு 1,000 டன் நெல் மூட்டைகள் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை மாவட்டம். இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் இந்திய உணவு கழகத்துக்காக கொள்முதல் செய்யப்பட்டு சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்படுகிறது.பிறகு தேவைப்படும்போது பொது விநியோக திட்டத்துக்காக அரவை செய்யப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அரிசி அனுப்பி வைக்கப்படும். மேலும் தேவைப்படும் மாவட்டங்களுக்கு அரவைக்காக நெல் அனுப்பி வைக்கப்பட்டு அரிசி விநியோகிக்கப்படும். இந்நிலையில் தஞ்சையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளில் 1,000 டன் அளவிலான நெல், லாரிகள் மூலம் தஞ்சை ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து 21 வேகன்களில் அரவைக்காக திருநெல்வேலி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories:

>