வேம்படிதாளத்தில் தரைப்பாலத்தை இருவழி பாதையாக மாற்ற கோரிக்கை

இளம்பிள்ளை, டிச.12: வேம்படிதாளம் ரயில்வே தரைவழிப்பாலத்தை இருவழிப்பாதையாக மாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காகாபாளையம்-இளம்பிள்ளை சாலையில் வேம்படிதாளத்தில் தரைவழி மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் 2 வழிகளில் ஒருவழிப் பாதையில் மட்டும் வாகனங்களும் சென்று வருகின்றன. மற்றொரு பாதையில் சாக்கடை கழிவுநீர் சென்று வருவதால், இந்த இருவழி பாதை ஒருவழி பாதையாக செயல்பட்டு வருகிறது. இவ்வழியானது இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, நடுவனேரி, வேம்படிதாளம், காகாபாளையம், ஆட்டையாம்பட்டி, ராசிபுரம், சின்னப்பம்பட்டி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பிரதான சாலையாக இருந்து வருகிறது. இந்நிலையில், வாகனங்கள் செல்ல ஒரு வழிப்பாதை மட்டும் செயல்பட்டு வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது.

மேலும் மழைக்காலங்களில், பாலத்தின் அடியில் தண்ணீர் குளம் போல் தேங்குவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் அவசர நேரங்களில் பாலத்தினை கடக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்து செல்கின்றனர். எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, இந்த சாலையை இருவழிப் பாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>