. ஆர்.எஸ்.மங்கலம் அருகே அரசு பள்ளியில் மனித உரிமைகள் தின விழா

ஆர்.எஸ்.மங்கலம், டிச. 12: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள சனவேலி அரசுப் பள்ளியில் சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டது. ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் சனவேலி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மனித உரிமைகள் தின விழா பள்ளி தலைமை ஆசிரியை (பொ) மெஸியானந்தி தலைமையிலும், முதுகலை ஆசிரியர் தங்கப்பாண்டியன் முன்னிலையிலும் நடைபெற்றது.

உலக மனித உரிமைகள் தினம் என்பது 1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் நாள் ஐக்கிய நாடுகள் அவையில் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை பிரகடனப்படுத்தப்படுத்திய நாளாகும். அந்த நாளை குறிக்கும் விதமாக மனித உரிமை நாள் கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய நோக்கமே ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறுவதற்கும், மற்ற மனிதரை வாழவிடும் நெறிமுறையை உணர்த்துவதற்காகவும் எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்களாகவும் உரிமையிலும், கண்ணியத்திலும் அனைவரும் சமமானவர்கள் என்பதையும் இந்த நாள் பிரகடனம் வலியுறுத்துகிறது.

ஆகையால் இனம், நிறம், மதம், மொழி, பாலினம், அரசியல் நாடு சமுதாய தோன்றல் சொத்து, பிறப்பு அல்லது சமூக உயர்வு போன்ற எந்தவித வேறுபாடுகளும் இன்றி ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் அவசியத்தை உணர்த்துவதற்காகவே இந்த மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதை மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக் கூறி அனைவரும் மதிக்கபட வேண்டும், சட்டம் அனைவருக்கும் சமம் மனித வாழ்வில் ஏற்ற தாழ்வு பாராமல் சகோதரத்துவத்துடனும் மனித மாண்புடனும் வாழ வேண்டும் என கூறி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்வில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ராஜசேகரன், டேவிட், ஆப்ரகாம் ஜான்சன், ஜெனட் சாந்தி, சந்திரன், சுதா, தெய்வ காயம் மேரீஸ் உள் ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: