இன்று (டிச.12) மைதிலி சரண் குப்த் நினைவு தினம் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 827 பேர் வேட்புமனு

திண்டுக்கல், டிச. 12: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு நேற்று ஒரே நாளில் 827 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 306 கிராம ஊராட்சி தலைவர், 2772 கிராம ஊராட்சி வார்டு, 232 ஒன்றிய கவுன்சிலர், 23 மாவட்ட கவுன்சிலர் என மொத்தம் 3333 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. உள்ளாட்சி தேர்தல் பணிக்கு மாவட்டத்தில் 31 தேர்தல் அலுவலர்கள் 429 உதவி தேர்தல் அலுவலர்கள் என மொத்தம் 460 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக டிச. 27ம் தேதி ஆத்தூர், வத்தலகுண்டு, திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரம், சாணார்பட்டி உள்ளிட்ட 7 ஊராட்சி ஒன்றியங்களில் 144 கிராம ஊராட்சி தலைவர்கள்,1401 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 125 ஒன்றிய கவுன்சிலர் வார்டுகள், 13 மாவட்ட கவுன்சிலர்கள் என மொத்தம் 1683 பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

இரண்டாம் கட்டமாக டிச. 30ம் தேதி குஜிலியம்பாறை, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், பழனி, தொப்பம்பட்டி, வடமதுரை, வேடசந்தூர் உள்ளிட்ட 7 ஊராட்சி ஒன்றியங்களில் 162 கிராம ஊராட்சி தலைவர், 1371 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 107 ஒன்றிய கவுன்சிலர், 10 மாவட்ட கவுன்சிலர் என மொத்தம் 1650 பதிவுகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் துவங்கிய டிச.9ல் இருந்து கடந்த 2 நாட்களாக மந்தமாக இருந்த நிலையில், நேற்று பவுர்ணமியை முன்னிட்டு அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் என பலர் வேட்புமனுகளை ஆர்வமுடன் தாக்கல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பஞ்சாயத்து தலைவர் 176 பேர், பஞ்சாயத்து உறுப்பினர்கள் 635 பேர், பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர்கள் 16 பேர் என மொத்தம் 827 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் சூடுபிடிக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: