ரயில்வே விதிமீறிய 219 பேர் மீது வழக்கு

ஈரோடு, டிச.12: ரயில்வே விதிகளை மீறியதாக கடந்த மாதம் 219 பேர் மீது ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.64ஆயிரத்து 850ஐ அபராதமாக வசூலித்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுனில்குமார் கூறியதாவது: ரயில்வே விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதம் ரயில்வே போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், ரயில்வே பிளாட்பார்ம் மற்றும் ஓடும் ரயில்களில் அனுமதியின்றி வியாபாரம் செய்தவர்கள், தண்டவாளத்தை கடக்க முயன்றவர்கள், பயணிகளுக்கு இடையூறு செய்தவர்கள், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் ஓடும் ரயில்களில் புகைப்பிடித்தல், அபாய சங்கிலியை பிடித்து இழுத்தல் போன்றவைகளில் ஈடுபட்டதாக 121 பேர் மீதும், ரயில்வே ஸ்டேஷன்களில் அசுத்தம் செய்ததாக 98 பேர் மீதும் என மொத்தம் 219 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் அபராதமாக ரூ.64,850 வசூலிக்கப்பட்டது. மேலும், கார்த்திகை சீசன் என்பதால், சபரிமலை மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களிலும் பக்தர்கள் சூடம் ஏற்றி வழிபடக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: