மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி

இலுப்பூர், டிச.12: இலுப்பூரில் மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இலுப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ஒன்றிய அளவில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கிடையே தனித்தனியாக 50 மீட்டர் ஓட்டம், நின்ற இடத்தில் இருந்து தாவுதல், மென்பந்து எறிதல், பாட்டிலில் நீர் நிரப்புதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை பள்ளி பெற்றோர், ஆசிரியர் கழக தலைவரும், மாவட்ட கூட்டுறவு சங்க தலைவருமான சின்னதம்பி வழங்கினார். இதில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராமன், அன்னவசல் வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோவிந்தராஜ், இயன்முறை மருத்துவர் கோவிந்தராஜ், வட்டார வளமைய பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: