மாலையில் மாவட்டம் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் ஊழியர்கள் இல்லாததால் அவலம் படியுங்கள் கம்பம் பள்ளி சார்பில் ‘பிட் இந்தியா’ மாரத்தான் போட்டி

கம்பம், டிச.11: கம்பம் சக்தி விநாயகர் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் “பிட் இந்தியா” மாரத்தான் போட்டி நடைபெற்றது.தனி மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்களது உடல் திறனை வளர்த்துக் கொள்ளவும், உடல் உறுதியை பேணும் வகையிலும், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்ற வேண்டி “பிட் இந்தியா” திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கம்பம் சக்தி விநாயகர் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் “பிட் இந்தியா” மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை பள்ளி தாளாளர் அச்சுதநாகசுந்தர் துவக்கி வைத்தார்.

போட்டியில் பள்ளி மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். போட்டி பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கி பாரஸ்ட் ரோடு, பத்திர பதிவு அலுவலகம், உழவர் சந்தை, நாட்டுக்கல், வேலப்பர் கோவில் தெரு, காந்திசிலை வழியாக பள்ளியில் நிறைவடைந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள், பெற்றோர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் கவிதா, பள்ளி முதல்வர் கணபதி, மெட்ரிக் பள்ளி முதல்வர் கருப்பசாமி, ஆசிரியர், ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: