கலெக்டர், ஆணையர் தலைமையில் நடந்தது திருச்சியில் குடியிரிமை சட்ட மசோதா நகலை எரித்த எஸ்டிபிஐ கட்சியினர் 72 பேர் கைது

திருச்சி, டிச.11: திருச்சியில் குடியுரிமை சட்ட மசோதா நகலை எரித்த எஸ்டிபிஐ கட்சியினர் 72 பேரை போலீசார் கைது செய்தனர்.அண்டை நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளான முஸ்லிம் அல்லாத அகதிகள், 5 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தால் அவர்கள் குடியுரிமை வழங்கும் விதத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்களில் யாரேனும் சட்டவிரோத குடியேறிகளாக அடையாளம் காணப்பட்டு இந்தியாவில் வழக்கை சந்தித்திருந்தால் அவர்களுக்கு இந்த மசோதா பாதுகாப்பு அளிக்கும்.

Advertising
Advertising

இந்த மசோதா குறிப்பிட்ட ஒரு மதத்தை புறக்கணிப்பதாக கூறி அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மரக்கடையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி குடியுரிமை சட்ட மசோதா மாதிரி நகலை எரிக்கும் போராட்டத்தை நேற்று அறிவித்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

ஆனாலும் மாநில தலைவர் முபராக் தலைமையில் திரண்ட கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது மசோதா நகலை எரிக்க முயன்றபோது போலீசார் தடுக்க முயன்றனர். அப்போது போலீசாருக்கும் கட்சியினருக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மசோதா நகலை எரிக்க முயன்ற 72 பேரை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Related Stories: