திருச்சி முகாம் சிறையில் இருந்து

திருச்சி, டிச. 11: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் 33 இலங்கை தமிழர்கள், 23 வங்கதேசம், 1 சூடான், 1 இங்கிலாந்து, 1 சீனா, 5 பல்கேரியா, 2 தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 69 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பாஸ்போர்ட் வழக்குகளில் கைதாகி அடைக்கப்பட்டவர்கள் ஆவார்கள். இதில் தங்கள் மீதான வழக்குகளை வெளியில் இருந்து நடத்தி கொள்வதாக கூறி கடந்த மாதம் 30 பேர் உண்ணாவிரதம் இருந்தனர்.இதில் 15 பேர் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து முகாம் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் உள்பட ஏராளமானவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் முகாம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வங்கதேசத்தை சேர்ந்த 23 பேரில் 19 பேர் அவர்களின் சொந்த நாட்டுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.இதையடுத்து நேற்று மதியம் ஹவுரா எக்ஸ்பிரஸ் மூலம் கொல்கத்தாவிற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து வங்கதேச எல்லையில் உள்ள அந்த நாட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: