கடும் விலை ஏற்றம் எதிரொலி வெங்காய மண்டிகளில் அதிரடி சோதனை

கடலூர்: கடலூரில் வெங்காய மண்டிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தமிழகம் முழுவதும் கடும் தட்டுப்பாடு காரணமாக வெங்காயத்தின் விலை ஏற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் ரூ.110 முதல் ரூ.160 வரை ரகத்திற்கு ஏற்றார்போல் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் வெங்காய கடைகள் மற்றும் மண்டிகளில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என உணவு கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயன், லட்சுமிநாராயணன் மற்றும் போலீசார், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மார்க்கெட் பகுதியில் உள்ள வெங்காயம் மண்டியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வெங்காயம் மண்டியில் விற்பனை செய்யும் அளவிற்கு இருந்தது தெரியவந்தது. மேலும் பதுக்கப்படவில்லை என கண்டறியப்பட்டது. இதேபோல் பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே போலீசாரின் சோதனையை தொடர்ந்து நேற்று கடலூரில் வெங்காயத்தின் விலை அதிரடியாக ரூ.25 முதல் தரத்திற்கேற்ப ரூ.80 வரை விற்கப்பட்டது.

Related Stories: