அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்ப விழா

ஜெயங்கொண்டம், டிச. 10: திருச்சி சரக போலீஸ் துணைத்தலைவர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி அரியலூர் எஸ்பி சீனிவாசன் உத்தரவின்பேரில் டிஎஸ்பி மோகன்தாஸ் ஆலோசனையின்பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குடும்ப விழா கொண்டாடப்பட்டது. அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெரும்பாலும் குடும்ப பிரச்னை, மனக்கசப்பு காரணமாக புகார் அளிக்கின்றனர். அந்த புகார்கள் விசாரிக்கப்பட்டு புகார் அளித்த பெண், அவரின் கணவர் மற்றும் குடும்பத்தினரை அழைத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து சமாதானம் செய்து அவர்களை மீண்டும் சேர்ந்து வாழ வழிவகை செய்து வருகின்றனர்.

அவ்வாறு சமாதானம் செய்து அனுப்பப்பட்ட தம்பதியினர் தொடர்ந்து போலீசாரால் கண்காணிக்கப்பட்டும் வருகின்றனர். இதுபோன்ற தம்பதியினரை மீண்டும் அழைத்து ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் குடும்ப வாழ்வியல் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இதில் மனோதத்துவ வகுப்புகள் எடுக்கப்பட்டன. ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரகலா தலைமை வகித்தார். வழக்கறிஞர் கார்த்திகா, செல்வி முன்னிலை வகித்தனர். இதில் குடும்ப பிரச்னை காரணமாக புகார் அளித்த தம்பதியினர் அனைவருக்கும் அழைப்பு விடுத்து வரவழைக்கப்பட்டு கணவன்- மனைவி குடும்பத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories: