ஊராட்சி மீது பொதுமக்கள் குற்றச்சாட்டுபயிர்காப்பீடு இழப்பீட்டை உடன் வழங்க வேண்டும்

சாயல்குடி, டிச.10: கடந்த 2018-2019ம் ஆண்டிற்கான பயிர்காப்பீடு இழப்பீடு தொகையை முழுமையாக வழங்க கோரி சிக்கல் பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2018-19ம் ஆண்டிற்கான வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, தேசிய பயிர்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பிரிமீயம் செலுத்தியிருந்தனர். அதன்படி மாவட்டத்தின் சில பகுதியினருக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு விட்டது. சில இடங்களுக்கு 2018-19ம் ஆண்டிற்கான பயிர்காப்பீடு இழப்பீடு தொகையும் விவசாயிகளின் வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலாடி தாலுகாவில் சில பகுதிக்கு மட்டும் வழங்கப்பட்டு விட்டு, பெரும் பகுதியான சிக்கல், பனிவாசல், ஏர்வாடி, இதம்பாடல், சொக்கானை, வள்ளக்குளம், பேய்க்குளம், கோழிக்குளம், மேலச்சிறுபோது, புத்தனேந்தல், பூலாங்கள், பன்னந்தை, ப.கீரந்தை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்தாண்டு விவசாயம் செய்ய வாங்கிய கடனை கட்ட முடியாமலும், தற்போது நல்ல மழை பெய்தும் கூட தொடர்ந்து விவசாய பணிகளை செய்ய போதிய பணம் இன்றி கஷ்டப்படுவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

பயிர்காப்பீடு இழப்பீடு தொகை கேட்டு பலமுறை கலெக்டரிடம் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இழப்பீடு தொகை முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இந்தாண்டு சிக்கல் பகுதியில் விளைந்துள்ள நெல்லை வாங்குவதற்கு சிக்கலில் நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து, விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் விலையில் வாங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: