பாலீஸ் போட்டு தருவதாக கூறி கவரிங் நகையை கொடுத்து பெண்ணிடம் மோசடி

பாலக்காடு, டிச. 10: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா அருகே ஐயப்பன்பொற்றா பகுதியை சேர்ந்தவர் குஞ்சு, தோட்டத்தொழிலாளி. இவரது மனைவி கமலாட்சி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் கமலாட்சி வீட்டுக்கு வந்தனர். அப்போது தங்கசங்கிலி பாலீஸ் போட்டுத்தருவதாக இருவரும் கூறி உள்ளனர். உடனே கமலாட்சி தான் அணிந்திருந்த நகையை கழற்றி கொடுத்துள்ளார். பின்னர் இருவரும் தங்க சங்கிலியை திராவகத்துக்குள் போட்டு பாலீஸ் போட்டு தருவதுபோல் நடித்து, கவரிங் நகையை கொடுத்து விட்டு தப்பி சென்றனர். நகையை வாங்கி பார்த்த கமலாட்சி அது போலி நகை என கண்டுபிடித்தார். இது குறித்து கமலாட்சி மலம்புழா போலீசில் அளித்த புகாரின் பேரில், எஸ்.ஐ. ராஜேஷ் தலைமையில் போலீசார் மலம்புழாவை அடுத்த ஆனக்கல் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த வடமாநிலத்தை சேர்ந்த இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பீகார் மாநிலம் அராரியா மாவட்டம் மட்டியாரியை சேர்ந்த பிஜேந்திரகுமார் (32), ராஜ்குமார் சக் (42) என்பதும், இவர்கள் இருவரும் கமலாட்சியிடம் நகை மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் நைசாக பேசி தங்க சங்கிலியை பாலீஸ் போடுவதுபோல் நடித்து போலி நகைகளை கொடுத்து ஒரிஜினல் நகைகளை திருடி செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: