தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் ஒன்றிய அலுவலகங்களில் மறைக்கப்படாத கல்வெட்டு

திருவள்ளூர், டிச 10:  திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்து,  வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ளது, இந்நிலையில் ஒன்றிய, ஊராட்சி அலுவலகங்களில், கல்வெட்டுகள் மறைக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் வரும், 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில்  இரு கட்டங்களாக நடக்கும் என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் 2ம் தேதி முதல் அமலுக்கு வந்தது, இந்நிலையில்  ஈக்காடு உட்பட பல ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்களில் உள்ள அரசு கல்வெட்டு, தலைவர்களின் படங்கள் மறைக்கப்படாமல் உள்ளன.

கிராம பகுதிகளில் ஓட்டுச் சாவடி மையங்கள் அருகிலுள்ள அரசியல் கல்வெட்டு, தலைவர்களின் சிலை, படங்களை மறைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனிடையே, ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், ஒன்றிய அலுவலகங்களுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். ஆனால், பூண்டி உட்பட பல ஒன்றிய அலுவலகங்களில் கல்வெட்டுகள் மறைக்கப்படாமல் உள்ளது.

Related Stories: