அபாய பாலம் மாலையில் படியுங்கள் மழை பெய்ய வாய்ப்பு பரமக்குடி தொகுதியில் களை கட்ட துவங்கிய உள்ளாட்சி தேர்தல்

பரமக்குடி, டிச.9: பரமக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தேதி அறிவித்துள்ளதால், தேர்தல் ஆயத்த பணிகள் களை கட்ட தொடங்கி விட்டது. உள்ளாட்சி தேர்தல் நடந்துவதற்கு தேர்தல் ஆனையம் தேதி வெளியிட்டதால் தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகள் படுஜோராக நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றிய அளவிலான தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு, பெரும்பான்மை உள்ளவர்கள் ஒன்றிய சேர்மனாக பதவியேற்று ஒன்றிய நிர்வாகத்தை கவனிப்பார்கள். இதில் ஒன்றிய ஒன்றிய சேர்மன் மட்டுமே முழுமையான பலனை பெற்று வருகிறார். கவுன்சிலர்களுக்கு சேர்மனை தேர்வு செய்வது வரை மதிப்பும் மரியாதையும் இருக்கும். சேர்மன் தேர்வு செய்யப்பட்டவுடன், யாரும் அவர்களை கண்டுகொள்வதில்லை. கவுரப் பதவியாக மட்டும் வைத்து கொள்ளாலாம். அதுவும் எதிர்கட்சியாக இருந்தால் கிடைக்கும் மரியாதையை விட ஆளும் கட்சி என்றால் மரியாதையே இல்லாமல் போய் விடுகிறது. ஆளும் கட்சியாக இருந்தாலும் கேட்பவைகளும் கிடைப்பதில்லை.

ஓட்டு போட்டவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய அடுத்தவர்களின் தயவை எதிர்பார்த்து நிர்க்க வேண்டியுள்ளது. ஒன்றிய கவுன்சிலருக்கு ஒதுக்கப்படும் நிதியில் மக்கள் எதிர்பார்க்கும் பணிகளை செய்ய முடிவதில்லை. ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் ஓராண்டுக்குள் செலவு செய்த பணத்தை எடுத்து விடுகின்றனர். ஆனால் ஒன்றிய கவுன்சிலர்களில் கவுரவத்திற்கு செலவு செய்து விட்டு கடன்காரர்களாக உள்ளனர். இதனால் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் பேட்டியிடுவதை விட்டு விட்டு பணம் கொழிக்கும் ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளை கைப்பற்றும் எண்ணத்தில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பலர் தேர்தல் வேலையில் மும்மூரமாக ஈடுபட்டுள்ளனர். ஊராட்சிக்கு வரும் நிதி, பசுமை வீடு, இந்திரா நினைவு குடியிருப்பு வீடு, எம்.எல்.ஏ., எம்.பி. நிதி மற்றும் தாய்திட்டம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் நிதிகளை பெற்று பணிகளை செய்வதன் மூலம் மக்களிடம் நன்மதிப்பையும், செல்வாக்கையும் உயர்த்தி கொள்ளலாம் என ஒன்றிய கவுன்சிலர்கள் பலர் நினைக்கின்றனர். தேர்தல் செலவு இரண்டு பதவிகளுக்கும் ஏறக்குறைய ஒரே அளவாக உள்ளதால், பயனில்லா ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கஷ்டப்படுவதை விட, பணம் வரும் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை கைப்பற்றும் நோக்கில் பணிகளை தொடங்கியுள்ளனர். இதனால் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கலக்கத்தில் உள்ளனர். ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவிக்கமால் உள்ளதால், ஆளும் அரசியல் கட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட புதுமுகங்களை களத்தில் இறக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

Related Stories: