மது விற்ற 4 பேர் கைது

ஈரோடு, டிச. 9: கடத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொத்துக்காடு-நாகரனை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்ற சத்தியமங்கலம் அருகே கொத்துக்காடு பகுதியை சேர்ந்த முனிராஜ் (44) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.பெருந்துறை போலீசார் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த புதுக்கோட்டை ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த பாலு (32) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் சத்தியமங்கலம் போலீசார் புதுக்குய்யனூர் வேடர்காலனி பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த மணி (65) என்பவரை போலீசார் கைது செய்து, 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கொடுமுடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலைப்புதூர் பஸ் ஸ்டாப்பில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாக புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வெள்ளாளவீடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (31) என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மாவட்டம் முழுவதும் சட்ட விரோதமாக மதுபானம் விற்றது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 21 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>