சிவகங்கை, டிச.5: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த தேர்தல்களில் குறைவான வாக்குகள் பதிவான இடங்களை கண்டறிந்து அங்கு வாக்குப்பதிவை அதிகப்படுத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2011 மற்றும் 2016 சட்டசபை தேர்தலில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் சுமார் 60 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதிவாகின. காரைக்குடி, கோட்டையூர், மானாமதுரையில் உள்ள குறிப்பிட்ட வாக்குச்சாவடிகள், சிறுநல்லூர், பெரியகோட்டை, கீழப்பட்டமங்கலம், செவரக்கோட்டை, ஆத்தங்குடி, கிளாதரி, காளையார்மங்கலம், முத்தரசன், சிரமம், காஜ்சிரங்கால், பாகனேரி, மைக்கேல்பட்டணம், நடராஜபுரம், இடையமேலூர், மேப்பல், வைரவன்பட்டி, வி.புதுக்குளம், கல்ல்ல, நகரம்பட்டி, வீரனேந்தல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஊர்களில் குறைவான வாக்குகள் பதிவாகின. இதில் கிராமங்கள் மட்டுமல்லாது நகரங்களிலும் குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் குறைவான வாக்குகள் பதிவாகியிருப்பது குறித்து தேர்தல் கமிஷன் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்படி குறைவான வாக்குகள் பதிவானதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.