திமுக சார்பில் நிதிஉதவி

தாரமங்கலம், டிச.5: தாரமங்கலம் பேரூராட்சி 6வது வார்டை சேர்ந்தவர் ரவிக்குமார்(40). கூலி தொழிலாளியான இவருக்கு சாலை விபத்தில் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதேபோல் பேரூராட்சி 10வது வார்டை சேர்ந்த நெசவுத்தொழிலாளி செந்தில்குமார்(32). சர்க்கரை வியாதியால் இவரது ஒரு கால் அகற்றப்பட்டது. இவர்கள் இருவரும் தொழில் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருவதாக, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அம்மாசியிடம், கட்சி சார்பில் உதவி கேட்டனர். இதுகுறித்து அவர் நாமக்கல் எம்பி சின்ராஜிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர், மருத்துவ உதவியாக செந்தில்குமாருக்கு ₹35 ஆயிரமும், செந்தில்குமாருக்கு ₹15 ஆயிரம் தொகைக்கான காசோலையை வழங்கினார். இதை பாதிக்கப்பட்ட இருவரின் வீட்டிற்கு நேரில் சென்ற அம்மாசி, குடும்பத்தாரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் சேகர், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் முத்துசாமி, பரமசிவம், துரைசாமி, சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>