மணப்பாறையில் ஓய்வு ஆசிரியையிடம் 9 பவுன் நகை பறிப்பு

மணப்பாறை, டிச.5: மணப்பாறை ராஜிவ்நகரை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி(68), ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர் மளிகை கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பும்போது பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர், கழுத்தில் இவ்வளவு நகை ஏன் போட்டு இருக்கிறீர்கள், அதை கழற்றி பத்திரமாக பையில் வைத்துக்கொண்டு செல்லுங்கள். பாதுகாப்பு அதிகாரியான நான் சொல்வதை கேளுங்கள் என நம்பும்படி கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய ஆரோக்கியமேரியும் கழுத்தில் கிடந்த நகைகளையும், கையில் போட்டிருந்த வளையல்களையும் கழற்றி பையில் போட்டுக்கொண்டு சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது 9 பவுன் நகைகள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த நூதன வழிப்பறி குறித்து ஆரோக்கியமேரி மணப்பாறை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>