மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 14 ஒன்றியங்களில் 9.08 லட்சம் வாக்காளர்கள்

ஈரோடு, டிச. 5:  ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் 9.08 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், மொடக்குறிச்சி ஒன்றியத்தில் அதிக வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

 ஈரோடு மாவட்டத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் 14 ஒன்றியங்களிலும் 9.08 லட்சம் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்.4ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி, தற்போது உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. கடந்த 1ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விண்ணப்பித்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வாய்ப்புள்ளது. இதன்படி, தேர்தல் நடக்க உள்ள 14 ஒன்றியத்தில் உள்ள வாக்காளர்கள் விவரம்: ஈரோடு ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளில் 63 வார்டுகளில் 15,938 ஆண், 16,651 பெண் மற்றும் இதர 5 என மொத்தம் 32,594 வாக்காளர்களும், மொடக்குறிச்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சிகளில் உள்ள 219 வார்டுகளில் 46,210 ஆண், 48,980 பெண், இதர 19 என மொத்தம் 95,209 வாக்காளர்களும், கொடுமுடியில் 10 ஊராட்சிகளில் உள்ள 81 வார்டுகளில் 12,610 ஆண், 13,753 பெண் மற்றும் இதர 2 என 26,365 வாக்காளர்களும், பெருந்துறையில் 29 ஊராட்சிகளில் உள்ள 228 வார்டுகளில் 31,110 ஆண், 32,314 பெண் என 63,424 வாக்காளர்கள் உள்ளனர்.

 மேலும் சென்னிமலையில் 22 ஊராட்சிகளில் உள்ள 186 வார்டுகளில் 37,029 ஆண், 38,586 பெண், இதர 4 என 75,619 வாக்காளர்களும், அம்மாபேட்டையில் 20 ஊராட்சிகளில் உள்ள 195 வார்டுகளில் 42,362 ஆண், 41,300 பெண் என 83,662 வாக்காளர்களும், அந்தியூரில் 14 ஊராட்சிகளில் உள்ள 156 வார்டுகளில் 43,691 ஆண், 43,069 பெண் மற்றும் இதர 2 என 86,762 வாக்காளர்களும், பவானியில் 15 ஊராட்சிகளில் உள்ள 150 வார்டுகளில் 41,706 ஆண், 43,166 பெண் என 84,872 வாக்காளர்களும், கோபியில் 21 ஊராட்சிகளில் உள்ள 195 வார்டுகளில் 38,766 ஆண், 40,766 பெண், இதர 1 என 79,533 வாக்காளர்கள் உள்ளனர். நம்பியூர் 15 ஊராட்சிகளில் உள்ள 135 வார்டுகளில் 27,483 ஆண், 28,710 பெண், இதர 2 என 56,195 வாக்காளர்களும், துக்கநாயக்கன்பாளையத்தில் 10 ஊராட்சிகளில் உள்ள 102 வார்டுகளில் 20,116 ஆண், 21,261 பெண் இதர 2 என 41,379 வாக்காளர்கள் உள்ளனர். இதேபோல் சத்தியமங்கலம் 15 ஊராட்சிகளில் உள்ள 147 வார்டுகளில் 36,848 ஆண், 36,552 பெண் இதர 1 என 72,401 வாக்காளர்களும், பவானிசாகர் 15 ஊராட்சிகளில் உள்ள 141 வார்டுகளில் 30,800 ஆண், 31,400 பெண் இதர 2 என 62,202 வாக்காளர்களும், தாளவாடி 10 ஊராட்சிகளில் உள்ள 99 வார்டுகளில் 23,919 ஆண், 24,024 பெண் என 47,943 வாக்காளர்கள் என மொத்தம் 14 ஒன்றியத்தில் 225 ஊராட்சிகளில் உள்ள 2,097 வார்டுகளில் 4,47,588 ஆண், 4,60,532 பெண், இதர 40 என மொத்தம் 9,08,160 வாக்காளர்கள் உள்ளனர். இதில் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் அதிக வாக்காளர்களும், கொடுமுடி ஒன்றியத்தில் குறைந்த வாக்காளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>