இடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் 1,000 ஏக்கரில் மஞ்சள் அறுவடைக்கு தயார்

இடைப்பாடி, டிச.4:  தொடர் மழையால் இடைப்பாடி சுற்றுவட்டாரத்தில் 1000 ஏக்கரில் மஞ்சள், செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. சேலம் மாவட்டத்தில் பூலாம்பட்டி, கள்ளுக்கடை, சித்தூர், பில்லுக்குறிச்சி, காசிக்காடு, கூடக்கல், காட்டுவளவு, ஓனாப்பாறை, கோனேரிப்பட்டி, பூமணியூர், கல்வடங்கள், தேவூர், செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, அம்மாபாளையம், பாசக்குட்டை, வெள்ளிரிவெள்ளி, ஒக்கிலிபட்டி, சிலுவம்பாளையம் சுற்றுவட்டாரத்தில் விவசாயிகள் 1000 ஏக்கரில் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். பொங்கல் பண்டிகையை எதிர்நோக்கி பயிரிடப்பட்ட இந்த மஞ்சள், மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பு அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்பப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: