ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருள்கள்

பரமக்குடி, டிச.3: பார்த்திபனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் வார விழா கொண்டாடப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் டிச.2 முதல் 8ம் தேதி வரை கர்ப்பிணி தாய்மார்கள் வார விழா கொண்டாட அறிவுறுத்தியது. அதன்படி நடைபெற்ற இவ்விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சைனி செராபுதீன் தலைமை வகித்தார். பரமக்குடி சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரன், மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். அனைவருக்கும் நலவாழ்வு திட்ட கூடுதல் இயக்குனர் வனஜா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றி கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் கர்ப்பகால பராமறிப்பிற்கான பொருள்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கினார்.

விழாவில் மாநில தொற்றா நோய்கள் துறையை சார்ந்த மருத்துவர்கள் சிபி மாத்யூ, அபிஷேக், பார்த்திபனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர்கள் அபிதா ராணி, சக்திவேல், மாவட்ட தாய்சேய் நல அலுவலர் பத்மா, சுகாதாரத் துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணசாமி, மாவட்ட புள்ளியியல் உதவியாளர் சிராஜிதீன். வட்டார சுகாதார செவிலியர் மெகராஜ், சுகாதார ஆய்வாளர்கள் சாகுல்ஹமீது, சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமும், குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்களின் ஊட்டச்சத்து உணவு கண்காட்சியும் இடம் பெற்றிருந்தன. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காந்தி நன்றி கூறினார்.

Related Stories: