பாத்ரூமில் குளித்த பெண்ணை படம் பிடித்த வாலிபர் கைது

தேனி, டிச. 1: தேனியில் வீட்டின் முன்பாக உள்ள பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை செல்போனில் படம் பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தேனி அல்லிநகரம் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் அய்யாசாமி மகன் சுரேஷ்(36).

இவர் நேற்று முன்தினம் இப்பகுதியில் வசிக்கும் 33 வயது பெண் பாத்ரூமில் குளிப்பதை செல்போனை வைத்து படம் பிடித்துள்ளார்.

இதைப் பார்த்த அந்த பெண் செல்போனை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். அவரிடம் செல்போனை கேட்டு சுரேஷ் மிரட்டியுள்ளார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசில் அப்பெண் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார், சுரேஷ் மீது பெண்கள் மீதான வன்முறை தடுப்புச் சட்டப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories: