பெரம்பலூரில் 3ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

பெரம்பலூர், நவ. 29: பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் 3ம் தேதி நடக்கிறது. பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலகம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச தனியார்த்துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி சேர்க்கை முகாம் நடக்கிறது.இந்த வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி நிறுவனங்களான அமெசான், ரிலையன்ஸ், அசன்ஜர், பிலிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களின் சார்பில் மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் கலந்து கொண்டு 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான கல்வித்தகுதி, இளங்கலை வேதியியல், மைக்ரோபயாலஜி போன்ற கல்வி தகுதிக்கும், கணினி பயிற்சி முடித்தவர்களையும் தங்களுக்கு தேவையான காலி பணியிடங்களுக்கு ரூ.8 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சம்பளத்துக்கு மாற்றுத்திறனுடையோரை தேர்வு செய்யவுள்ளனர்.

தேர்வு செய்த அன்றைய தினமே பணி நியமன ஆணை வழங்கவுள்ளனர். மேலும் இந்த முகாமில் வேலைவாய்ப்பு பெறக்கூடிய திறன் பயிற்சி சேர்க்கையும் நடக்கிறது. முகாமில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சலுகைகள், முன்னோடி வங்கி சார்பில் கடனுதவி விவரங்கள், மாவட்ட தொழில் மையம் சார்பில் சுயதொழில் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது.இவ்வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக தனியார் துறையில் வேலை வாய்ப்பு பெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் ரத்து செய்யப்படாது.இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் சுயகுறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: