தேவாமங்கலம் கிராமத்தில் நிலக்கடலை சாகுபடி பண்ணை பள்ளி

ஜெயங்கொண்டம், நவ. 28: ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் தேவாமங்கலம் கிராமத்தில் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின்கீழ் (அட்மா) நிலக்கடலை சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி துவக்க விழா நடந்தது.வட்டார வேளாண் உதவி இயக்குனர் (பொ) சுப்ரமணியன் தலைமை வகித்தார். சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில் நுட்ப வல்லுநர் அசோக்குமார் பேசியதாவது: நிலக்கடலை சாகுபடியின்போது அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்புண்ணாக்கை இட வேண்டும். விவசாயிகள் விதைக்கும் முன் 45- 50 விதைக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் மற்றும் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனால் வேரழுகல் மற்றும் வேர்க்கரையான் தாக்குதல் இருக்காது. உரங்கள் எளிதில் மக்குவதற்கு டிகம்போஸர் பயன்படுத்த வேண்டும்.

ஏக்கருக்கு 40 எண்கள் பறவை தாங்கிகள் அமைப்பதால் பறவைகள் அதில் அமர்ந்து பயிரை சேதப்படுத்தும் பூச்சி மற்றும் புழுக்களை உணவாக உட்கொள்ளும். இதனால் பூச்சி தாக்குதல் இல்லாத சாகுபடி மேற்கொள்ள இயலும். மண் ஆய்வு முடிவுகளின்படி உரமிட்டால் உரச்செலவு குறைவதுடன் மண்ணின் வளமும் பாதுகாக்கப்படும் என்றார்.இதைதொடர்ந்து டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்யும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் மீனாட்சி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் முருகன், சங்கீத பிரியா கலந்து கொண்டனர்.பயிற்சியில் தேவாமங்கலம் கிராம விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர் கலந்து கொண்டனர்.பெரம்பலூர் துணை மின் நிலைய பகுதி: பெரம்பலூர் நகர பகுதிகளான 4 ரோடு முதல் புது பஸ்ஸ்டாண்ட் வரை உள்ள பகுதிகள்.

Related Stories: