விவசாயிகள் கவலை சீர்காழி சட்டநாதர் கோயில் எதிரே பல மாதமாக தேங்கி நின்ற மழைநீர் அகற்றம்

சீர்காழி,நவ. 28: சீர்காழி சட்டநாதர் கோயில் எதிரே பல மாதமாக தேங்கி நின்ற மழைநீர், தினகரன் செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டது.சீர்காழி சட்டநாதர் கோயிலில் திருநிலை நாயகி பிரம்மபுரீஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். மேலும் காசிக்கு இணையான அஷ்டபைரவர் தனி சன்னதியில் எழுந்தருளி உள்ளனர் இக்கோயிலில் அமைந்துள்ள பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் திருஞானசம்பந்தருக்கு பார்வதி அம்பாள் ஞானப்பால் வழங்கிய தலமாகும் இத்தகைய புகழ்வாய்ந்த கோவிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் கோயிலின் தெற்கு கோபுர வாசல் எதிரே மழைநீர் குளம் போல் பல மாதங்களாக தேங்கி நின்றது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் சட்டைநாதர் கோயில் முன்பு தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும் என தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதனை அறிந்த நாகை கலெக்டர் பிரவின் பி நாயர் தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க சீர்காழி நகராட்சி அலுவலத்திற்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் வசந்தன் மேற்பார்வையில் துப்புரவு பணியாளர்கள் கோயில் முன்பு தேங்கி நின்ற மழைநீரை அகற்றினர். இதனை அறிந்த பக்தர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் நடவடிக்கை எடுத்த நகை கலெக்டருக்கும் நகராட்சி ஆணையருக்கும் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்தனர்.புகையான் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. புகையான் பூச்சி தாக்குதல் ஏற்பட்ட வயலில் பயிர்களை ஆயிரக்கணக்கான புகையான் பூச்சிகள் பயிரின் அடிப்பகுதியில் பயிரில் ஓட்டிக் கொண்டு பயிரின் சாரை உரிஞ்சி பயிர் பழுப்பு நிறத்தில் பயிர் காணப்பட்டு பின்னர் பயிர் காய்ந்து சறுகாக மாறி விடுகிறது. வயலில் முதலில் திட்டு திட்டாக தொடங்கி பின்னர் வயல் முழுவதும் புகை ஊடுருவது போல் அனைத்து பகுதிக்கும் பரவி வருகிறது.

Related Stories: