மின் விளக்கின்றி இருள் சூழ்ந்தும் கிடக்கிறது ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கும் அவலம் லால்குடியில் பொதுமக்கள் அவதி

திருச்சி, நவ.27: ரயில்வே சுங்கப்பாதையில் மழைநீர் தேங்காமலும், மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். லால்குடி ரயில்வே கேட் உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக மழை உட்புகாதவாறு தடுப்பு சுவர்கள் அமைக்காததாலும், உட்புகும் மழைநீர் வெளியேற வழிவகை செய்யாததால் தேங்கிய மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்கள் நடக்க இயல முடியாதபடி இம்சை தருகிறது. இந்த கொசுக்கள் கடிப்பதால் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மின் விளக்குகள் இல்லாததால் இருள்சூழ்ந்து அபாயகரமாக தண்டவாளத்தை கடந்து செல்ல பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இதில் வயதானவர்கள், குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் தகுந்த பாதுகாப்பு இன்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் புகாமலும், மழைநீர் தேங்கி நிற்காமல் வடியவும், இருபக்கமும் மின் விளக்கு அமைத்தும் மக்கள் பயன்பாட்டிற்கு சுரங்கப்பதையை கொண்டு வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: