நகை அடகுக்கடை உரிமையாளர்களுக்கு குற்ற சம்பவங்கள் தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

அரியலூர், நவ. 27: அரியலூரில் நகை அடகுக்கடை மற்றும் வட்டி கடைகள் நடத்தி வரும் அனைவருக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அரியலூர் காவல் துணை கண்காணிப்பாளர் திருமேனி தலைமை வகித்தார். அரியலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சிவராஜ் முன்னிலை வகித்தார். அப்போது இரவில் கடைகளை பூட்டும்போது நன்றாக பூட்டப்பட்டு உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். கடைகளில் தரமற்ற கதவு மற்றும் ஜன்னல்கள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். கடையை சுற்றி வெளிச்சம் வசதிக்காக மின்விளக்குகள் அமைக்க வேண்டும். வசூலாகும் பணத்தை இரவு நேரத்தில் கடையில் வைக்கக்கூடாது. கடைக்கு பாதுகாவலர் நியமிக்க வேண்டும். மூன்றாம் கண்ணான சிசிடிவி கேமரா மற்றும் முன்னெச்சரிக்கை அலாரம் பொருத்த வேண்டும் அறிவுரை வழங்கப்பட்டது.

Related Stories: