காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் ரத்னாங்கி சேவை உற்சவம்

காஞ்சிபுரம், நவ.27: காஞ்சிபுரம்  வரதராஜபெருமாள் ஆலயத்தில் ரத்னாங்கி சேவை விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு  வரதராஜபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைணவர்களால் போற்றப்படும் 108 திவ்விய தேசங்களில் அதிக திவ்வியதேசங்கள் நிறைந்த ஊர் காஞ்சிபுரம். காஞ்சியில் பிரசித்தி பெற்ற வைணவ தலமான வரதராஜ பெருமாள் கோயிலில் ரத்னாங்கி சேவை நேற்று நடந்தது. இதை முன்னிட்டு தாததேசிகன் சாத்துமுறையும் விமர்சையாக நடந்தது.இதில் வரதராஜ பெருமாளுக்கு  தங்க அங்கி அணிவித்து, அதில் ரத்தின கற்கள் பொருத்தி சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன் எழுந்தருளி  பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து வரதர் ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தங்க அங்கி அணிந்து, பெருந்தேவி தாயாருடன் தேசிகர் சன்னதியில் எழுந்தருளி, தேசிகருக்கு ஜடாரியுடன் மாலை மரியாதை செலுத்தினார். பின்னர் ராஜவீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories: