உத்திரமேரூர் அருகே கலைஞர் பிறந்தநாள் விழா கிரிக்கெட் போட்டி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

 

உத்திரமேரூர், மே 20: உத்திரமேரூர் அருகே நடைபெற்ற கலைஞர் 101வது பிறந்தநாள் விழா கிரிக்கெட் போட்டியை க.சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த கட்டியாம்பந்தல் கிராமத்தில், கலைஞர் 101வது பிறந்தநாள் நிறைவு விழா கிரிக்கெட் போட்டி தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, கிரிக்கெட் விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார்.

இந்த போட்டியில் 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கு பெற்றுள்ளன. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக, சுந்தர் எம்எல்ஏ ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை, பரிசு மற்றும் கோப்பை வழங்க உள்ளார். 2வது பரிசு ரூ.20 ஆயிரத்தை திமுக ஒன்றியச் செயலாளர் ஞானசேகரன் வழங்க உள்ளார்.

3வது பரிசாக ரூ.15,000, 4வது பரிசாக ரூ.10,000, 5வது பரிசாக ரூ.7000 வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர்கள் ஞானசேகரன், குமார், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், பேரூராட்சித் துணைத் தலைவர் கோவிந்தராஜன், அவைத்தலைவர் சுப்பராயன், கிளைச் செயலாளர்கள் சேகர், தேவேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post உத்திரமேரூர் அருகே கலைஞர் பிறந்தநாள் விழா கிரிக்கெட் போட்டி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: