வந்தவாசி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தேர்தலில் 9 பேர் போட்டியின்றி தேர்வு 2 இயக்குனர் பதவிக்கு 29ம் ேததி தேர்தல்

வந்தவாசி, நவ.27: வந்தவாசி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தேர்தலில் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 2 இயக்குனர் பதவிக்கான தேர்தல் வரும் 29ம் தேதி நடைபெற உள்ளது. வந்தவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் தேர்தல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற இருந்தது. தேர்தலில் முறைகேடு நடப்பதாக எதிராக வழக்கு தொடரப்பட்டதால் தேர்தல் நிறுத்தப்பட்டது.தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவுபடி வேட்புமனு தாக்கல் கடந்த 22ம் தேதி ெதாடங்கியது. இதில் 35 பேர் மனு தாக்கல் செய்தனர். 23ம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலர் மூர்த்தி தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது அதிமுக, பாமகவை சேர்ந்த சிலர் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 29 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது.இதனால் அதிமுக, பாமகவினர் நேற்று முன்தினம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக்கு சென்று அங்கு ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை கிழித்து எறிந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் மூர்த்தி, செயலாளர் மாசிலாமணியிடம் வாக்குவாதம் செய்து அவர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சுயேட்சையாக போட்டியிடும் சென்னாவரம் முனுசாமியிடம், அதிமுகவினர் சமரசம் செய்தனர். இதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் வங்காரம் இந்திராகாந்தி, கீழ்கொவளைவேடு கார்த்திகேயன் ஆகியோரை தவிர, அதிமுக, திமுக, பாமகவைச் சேர்ந்த 19 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர்.இதனால் பெண்கள், பொது பிரிவினருக்கு 9 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தாழ்த்தப்பட்டோருக்கான 2 இயக்குனர் பதவிக்கு வெண்குன்றம் தியாகராஜன்(திமுக), மோகன் (இந்திய குடியரசு கட்சி), ஏழுமலை (விசி) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.இதற்கான தேர்தல் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது. இதில் 4,189 பேர் வாக்களிக்க உள்ளனர். வாக்கு எண்ணிக்கை 30ம் தேதி நடைபெறுகிறது.

Related Stories: